
Abu Dhabi T10: Philip Salt shines as Team Abu Dhabi beat Chennai Braves (Image Source: Google)
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - டீம் அபுதாபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு பனுகா ராஜபக்ஷ அரைசதம் அடித்து உதவினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்களைச் சேர்த்தது.
இதையடுது இலக்கைத் துரத்திய அபுதாபி அணிக்கு பிலிப் சால்ட் - பால் ஸ்டிர்லிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் 44 ரன்களில் அட்டமிழந்தார்.