
2023 - 2024ஆம் ஆண்டுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. இதனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று வெளியிட்டார்.
2023 ஆடவர் ஆசிய கோப்பை, மகளிர் ஆசிய கோப்பை, ஏ அணிகளுக்கு இடையேயான வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை, சேலஞ்சர் கோப்பை, பிரீமியம் கோப்பை, அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர்கள் என ஆசிய அணிகளுக்கு இடையேயான 2023-2024ம் ஆண்டுகளுக்கான அனைத்து தொடர்கள் விவரங்களை வெளியிட்டது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கருத்தே கேட்காமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தன்னிச்சையாக 2023-2024ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய போட்டி தொடர் விவரங்களை வெளியிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்தார்.