
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற தென் ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4ஆவது ஒருநாள் ஆட்டம் செஞ்சூரியனில் இன்று நடந்து வருகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்ததார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது. ரீசா ஹென்றிக்ஸ் 28 ரன்களும் , குயிண்டன் டி காக் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராஸ்ஸி வான் டெர் டுசென் , ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர் . ரஸ்ஸி வான் டெர் டுசென் நிலைத்து ஆடினார் . அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார் .ஹென்ரிச் கிளாசென் தொடர்ந்து அதிரடி காட்டினார் .