
Adam Zampa Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரில் முன்னிலைப் பெறும். மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன்செய்ய முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர் ஆடம் ஸாம்பா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.