
Adil Rashid Out Of ODI, T20I Series Against India Due To Hajj Pilgrimage (Image Source: Google)
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஹஜ் பயணம் காரணமாக ஆதில் ரஷித் விலகியுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனிதத் தலம் மெக்கா. சவுதி அரேபியாவில் உள்ளது. வசதியும் வாய்ப்பும் இருந்தால் வாழ்வில் ஒரு முறையேனும் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் விரும்புவார்கள். இதனை ஹஜ் பயணம் என்பார்கள்.