
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னாறியது. அதேசயம் இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் மிர்ஸா பைக் 4, ரொஹைல் 10 ரன்களுக்கும், ஹைதர் அலி 2 ரன்களிலும், காஸிம் அக்ரம் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஒமைர் யுசுபும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து வந்த குஷ்டில் ஷா, ஆசிஃப் அலி போன்ற் அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.