ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன். இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர்.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பல முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு மாலையில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 25
- ஆஃப்கானிஸ்தான் - 17
- அயர்லாந்து - 08
நேரலை
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அதல், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, முகமது இஷாக், இஜாஸ் அகமது அஹ்மத்சாய், நங்கேயாலியா கரோட், ரஷித் கான் (கே), நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் வைட்
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணை கேப்டன்)
- பேட்டர்ஸ்: இப்ராஹிம் ஸத்ரன், ஹாரி டெக்டர், பால் ஸ்டிர்லிங்
- ஆல்-ரவுண்டர்கள்: கர்டிஸ் கேம்பர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, மார்க் அதிர், நங்கேயாலியா கரோட்
- பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான் (கேப்டன்), ஜோஷுவா லிட்டில்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now