Advertisement
Advertisement
Advertisement

AFG vs NED: நெதர்லாந்துக்கு 223 ரன்கள் இலக்கு!

நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
AFG vs NED, 1st ODI: Afghanistan set a target on 223 runs for Netherlands
AFG vs NED, 1st ODI: Afghanistan set a target on 223 runs for Netherlands (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 21, 2022 • 05:00 PM

ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தோஹாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 21, 2022 • 05:00 PM

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் குர்பஸ், உஸ்மான் கானி இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

Trending

பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - ஷாஹிதி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். 

பின் ரஹ்மத் 70 ரன்களிலும், ஷாஹிதி 73 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. 

நெதர்லாந்து அணி தரப்பில் பிராண்டன் குளொவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 223 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement