
Afghanistan and South Africa 2nd ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs SA 2nd ODI: Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - செப்டம்பர் 20, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
AFG vs SA 2nd ODI Live Streaming Details
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
AFG vs SA: Head-to-Head In ODIs
- மோதிய போட்டிகள் - 03
- தென் ஆப்பிரிக்கா - 02
- ஆஃப்கானிஸ்தான் - 01
- முடிவில்லை - 00