
ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின், அந்நாட்டைத் தலிபான்கள் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாகியுள்ளது.
சமீபத்தில், பிபிசி வானொலி நேர்காணலில் பேட்டியளித்த ஆப்கன் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், காபூலில் உள்ள தனது அணி வீரர்கள் கண்களில், குரல்களில், பேச்சில் கூட பயம் இருக்கிறது. தலிபான்கள் எந்த விளையாட்டு வீரரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளனர், ஆனால் அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது" என்று நவீன் கூறியுள்ளார்.
அதேபோல், சமீபத்தில் ட்வீட் செய்திருந்த முன்னாள் ஆப்கன் கேப்டன் முகமது நபி, "நான் உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்; ஆஃப்கன் ஒரு சிக்கலுக்குள், குழப்பத்திற்கும் செல்வதை தயவுசெய்து தடுத்துவிடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.