
Afghanistan Announce Squad For T20 World Cup 2022; Drops 5 Players From Asia Cup Squad (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன், பெரிய அணிகளை ஆட்டம் காண செய்தது. அதனால் ஆஃப்கானிஸ்தான் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.