திட்டமிட்டபடி பாகிஸ்தான் தொடரில் விளையாடுவோம்- ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்!
பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து, தாலிபான் தீவிரவாத அமைப்பு ஆஃப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. இதனால் அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தாண்டு அடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக அந்த அணி பாகிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
Trending
அதன்படி செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கையில் தொடங்கும் இத்தொடர், திட்டமிட்டபடி நடைபெறுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிபி தலைமை செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி கூறுகையில்,“ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. நாங்கள் தினசரி ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அலுவலங்களுக்கு சென்று வருகிறோம். அதேபோல் பாகிஸ்தானுடனான தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி நிச்சயம் விளையாடும். இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியும் கூடிய விரைவில் இலங்கைக்கு அனுப்படும்” என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட அம்பாந்டொட்டாவில் நடைபெறுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now