சிபிஎல் 2021: மூன்று ஆஃப்கானியர்கள் பங்கேற்பது உறுதி!
இந்த வருட கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடர், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 15 வரை செயிண்ட் கிட்ஸில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டு நடைபெறவுள்ள 33 ஆட்டங்களிலும் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய பிரபல ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்த வருட சிபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூவரும் பங்கேற்கவுள்ளார்கள்.
Trending
இந்நிலையில் குவாயிஸ் அஹமது, நவீன் உல்ஹக், வகார் சலாம்கெல் ஆகிய மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்த வருட சிபிஎல் போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
சிபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஜமைக்கா அணியில் குவாயிஸ் அஹமதும், கயானா அணியில் நவீன் உல்ஹக், வகார் சலாம்கெல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.
தற்போது ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள இந்த அசாதாரண சூழலில் ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து சிபிஎல் டி20 தொடரில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now