
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்! (Image Source: Google)
AFG vs BAN, 1st ODI, Cricket Tips: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வங்கதேச அணி ஏற்கனவே டி20 தொடரை வென்ற கையோடும், ஆஃப்கானிஸ்தான் அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முடிவுடனும் இந்த போட்டியை எதிர்கொள்ள இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs BAN: Match Details