Advertisement

வார்னர், ஸ்டோய்னிஸைத் தொடர்ந்து தி ஹெண்ரட் தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களினால் அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
After Warner And Stoinis, Glenn Maxwell Pulls Out Of The Hundred
After Warner And Stoinis, Glenn Maxwell Pulls Out Of The Hundred (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 26, 2021 • 11:36 AM

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 26, 2021 • 11:36 AM

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உள்பட 24  வெளிநாட்டு வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

Trending

இதில் இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையில் இத்தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களினால் அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை இங்கிலாந்து & வெல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. 

மேலும் மேக்ஸ்வெல்லிற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்லிஸ் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து & வெல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement