Advertisement
Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2022 • 13:35 PM
Afy Fletcher Makes Her Return To West Indies Squad For ODI Series Against South Africa
Afy Fletcher Makes Her Return To West Indies Squad For ODI Series Against South Africa (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. 

Trending


இந்நிலையில் இத்தொடருக்கான 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாஃபானி டெய்லர் தலைமையிலான இந்த அணியில் எஃபி ஃபிளட்செர் மீண்டும் இணைந்துள்ளார். 

குழந்தைப் பிறப்பு காரணமாக ஓய்விலிருந்த எஃபி ஃபிளட்சர் இத்தொடரின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். அதேசமயம் கேசியா ஷூல்ட்ஸ்,மாண்டி மங்ரு மற்றும் ஜன்னிலியா கிளாஸ்கோ போன்ற அறிமுக வீராங்கனைகளும் அணியில்  சேர்க்கப்பட்டுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஸ்டாஃபானி டெய்லர் (கேப்டன்), அனிசா முகமது, ஆலியா அலீன், ஷெமைன் காம்பெல், ஷமிலியா கானல், டியான்ட்ரா டோட்டின், அஃபி ஃபிளெட்சர், செர்ரி ஆன் ஃப்ரேசர், ஜானில்லியா கிளாஸ்கோ, சினெல்லே ஹென்றி, கைசியா நைட், மாண்டி மங்ரு, ஹெய்லி மேத்யூஸ், செடியன் நேஷன், கரிஷ்மா ராம்ஹராக், கெய்சியா ஷூல்ட்ஸ், ஷகேரா செல்மன், ரஷாதா வில்லியம்ஸ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement