
Aiden Markram Appointed New Captain Of South Africa Men's T20I Team For West Indies Series (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட விளையாடுகிறது. இந்நிலையில் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக மார்கரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்த பவுமா தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டு பிளெஸ்சிஸை அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா அறிவிக்கப்பட்டுள்ளார்.