முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.இதனால் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார்.
Trending
இதனையடுத்து 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கி இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார். 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம், “இந்த போட்டி நிச்சயம் கடினமாக இருந்தது. முதலில் டாஸ் வென்று நாங்கள் பேட்டிங் செய்தோம். நிறைய ரன்கள் அடிக்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் இந்திய வீரர்களுக்கு தான் பாராட்டுகளை கூற வேண்டும். ஆடுகளத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தி கிரிக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எங்களை ஆடுகளத்தில் நிலைத்து நிற்க அவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவும் இந்திய வீரர்கள் எங்களை விடவில்லை.
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள். ஆடுகளம் இவ்வாறு செயல்படும் என்றும் நான் நினைக்கவில்லை.ஒரு ஆறு ஏழு ஓவர்கள் வரை வந்து ஸ்விங் ஆகும். அதன் பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இன்றைய ஆட்டத்தில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆனது.
இதனால் எங்களால் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாட முடியவில்லை. நிச்சயமாக இது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. விக்கெட்டுகள் வீழத் தொடங்கியவுடன் ஆடுகளம் இவ்வாறு இருந்தும் எங்கள் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள்.பாசிட்டிவாக விளையாடுவது என்பது முக்கியம்தான். ஆனால் அதேசமயம் புத்தியையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்.
ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை கணித்து அதற்கு ஏற்ப உங்களுடைய சாட்டை தேர்வு செய்ய வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் செய்த தவறு குறித்து ஆராய வேண்டும். இதை அடுத்து மீண்டும் பேட்டிங் செய்வீர்களா என்று கேள்வி ஏற்பட்டதற்கு நிச்சயமாக மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now