ரிஷப் பந்தின் பிரச்சனை இதுதான் - அஜய் ஜடேஜா!
குறைந்த ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்பதை அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வலம் வருவார் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டப்பட்ட ரிஷப் பந்த், தற்பொழுது குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணில் இருந்து புறக்கணிக்கப்பட்ட வருகிறார்.
இதுவரை 62 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடினாலும் டி20 போட்டிக்கு இவருக்கான முன்னுரிமை மறுக்கப்பட்டு வருவது தற்பொழுது வளமையாக நீடித்து வருகிறது. டெஸ்ட் போட்டியை டி20 போட்டி போல் விளையாடும் திறமை படைத்த ரிஷப் பந்தால், டி20 தொடரில் நிலையாக விளையாட முடியாமல் போனது இதற்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.
Trending
குறிப்பாக தினேஷ் கார்த்திக்கின் வருகைக்கு பிறகு ரிஷப் பண்டின் இடம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் வருவதால் உலகக் கோப்பை தொடரில் இவர் ஆடும் லெவனின் விளையாட வைக்கப்படுவாரா..? அல்லது மாட்டாரா..? என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாததற்கான காரணம் என்னவென்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜய் ஜடேஜா தெரிவித்ததாவது, “லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பந்தால் சிறப்பாக செயல்பட முடியாததற்கான காரணம் இந்திய அணி புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்தத் திட்டத்தின் ரிஷப் பந்தால் ஒத்துழைக்க முடியவில்லை, இதனால்தான் அவர் தன்னுடைய இடத்தை இழக்கிறார். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தன்னுடைய வேலையை மிகச் சிறப்பாக செய்கிறார்.
அணிக்கு எது தேவையோ அதை நன்றாகவே செய்கிறார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் நாலாவது இடத்தில் பேட்டிங் செய்து 46 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு வீரரை எப்படி அணியிலிருந்து நீக்க முடியும்..? என்று கேள்வி எழுப்பிய அஜய் ஜடேஜா ரிஷப் பந்த் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now