
Ajaz Patel named ICC men's Player of the Month for December (Image Source: Google)
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரா்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021 டிசம்பா் மாதத்தில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
பரிந்துரைப் பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்த இந்தியாவின் மயங்க் அகர்வால், இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த நியூசிலாந்தின் அஜாஸ் படேல், ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 117 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் ஆகியோர் டிசம்பர் மாதத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.
இந்நிலையில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அஜாஸ் படேலை, டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.