
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜிங்கியா ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனீஷ் பாண்டே 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே சேர்த்தது.
சிஎஸ்கே அணி தர்ப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஆன்ஷுல் கம்போஜ், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அஜிங்கியா ரஹானே 48 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 5000 ரன்களைப் பூர்த்தி செய்து அசத்தினார்.