
இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும், அடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும், இறுதியாக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்க இருக்கிறது.
நாளை டொமினிக்கா மைதானத்தில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தனது தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிய அணியில் இருந்து விராட் கோலி மட்டுமே தற்பொழுது விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா கழட்டி விடப்பட்டு முகமது ஷமிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முகேஷ் குமார் வாய்ப்பு பெற்று இருக்கிறார். உனட்கட் மற்றும் சைனி ஆகியோர் இருக்கிறார்கள். எனவே இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.