
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜாரத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதேசமயம் 30 வயதுக்கு மேல் எந்த வீரராக இருந்தாலும் எங்கள் அணிக்கே என்று சிஎஸ்கே அணியில் சொல்லப்படாத உறுதி மொழி ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில், அனுபவ வீரர் ரஹானேவை சென்னை அணி ஏலத்தில் வாங்கியது. அதேபோல் ஃபார்மின்றி தவித்து வரும் ரஹானேவை யாரும் வாங்க முன் வராததால் ரூ.50 லட்சத்தில் அடிப்படை தொகைக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் டாடிஸ் ஆர்மி என்ற பெயருக்கு சென்னை அணி எவ்வித களங்கமும் இல்லாமல் பார்த்துக் கொண்டது.
அதுமட்டுமல்லாமல் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட சில வீரர்களையும் சென்னை அணி அதிரடியாக வாங்கியது. வழக்கம் போல் சென்னை அணி அனைத்து துறைகளிலும் சிறந்த வீரர்களை அணியில் வைத்துள்ளது. இதனால் தோனியின் கடைசி சீசனில் கோப்பை நிச்சயம் என்று ரசிகர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.