
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் தொடங்கி சில தினங்களே ஆன நிலையில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே சிறப்பு மைல் கல் ஒன்றை எட்டும் வய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ரஹானே, 92 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 7000 ரன்களை அவர் பூர்த்தி செய்வார். இதன்மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த 12ஆவது வீரர் எனும் பெருமையையும் ரஹானே பெறவுள்ளார்.