Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2023: ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த ஆகாஷ் மத்வால்!

லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பவுலர் ஆகாஷ் மத்வால் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 25, 2023 • 20:11 PM
Akash Madhwal Creates History Against LSG!
Akash Madhwal Creates History Against LSG! (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல்  தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றன. முதல் தகுதிப்போட்டியில் குஜராத்டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.  எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது தகுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் வரும் 28ம் தேதி சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.

எலிமினேட்டரில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் 5 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவியதுடன் சாதனைகளை வாரிக்குவித்தார்.  ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மாதிரியான வீரர்களை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, இப்போது திலக் வர்மா, நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் ஆகிய திறமைசாலிகளை அடையாளம் காட்டியுள்ளது.

Trending


அதன்படி லக்னோவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் சிறந்த எகானமியை கொண்ட அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார். 

அதேபோல் ஐபிஎல் பிளே ஆஃபில் மிகச்சிறந்த பவுலிங் இதுதான். மேலும் ஐபிஎல்லில் தேசிய அணிக்காக விளையாடாத பந்து வீச்சாளரின் சிறந்த பவுலிங் பெர்ஃபாமன்ஸ் இதுதான் என்பதும் அதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement