அசத்தலான கேட்சைப் பிடித்த அலெக்ஸ் டேவிஸ் - வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சதர்ன் பிரேவ் அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் டேவிஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் தொடக்க வீரர் டாம் பாண்டன் 30 ரன்களைச் சேர்த்த நிலையில், அவரைத்தொடர்ந்து விளையாடிய ஆடம் லித் 16, அலெக்ஸ் ஹேல்ஸ் 15, ஜோ ரூட் 16, ரோவ்மன் பாவெல் 16, லூயிஸ் கிரிகோரி 19 ரன்களைச் சேர்க்க அந்த அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் தலா 28 ரன்களைச் சேர்த்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே பிளெட்சர், லூயிஸ் டு பிளூய், லௌரி எவான்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
பின்னர் களமிறங்கிய கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி, 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொதப்பினாலும், இறுதியில் சதர்ன் பிரேவ் அணியானது 99 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்டெக்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Alex Davies, that is UNBELIEVABLE #TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/k8QYO5jnpR
— The Hundred (@thehundred) August 10, 2024
இந்நிலையில் இப்போட்டியில் சதர்ன் பிரேவ் அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் டேவிஸ் பிடித்த் கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்பாடி ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஜோ ரூட் லேட் கட் அடிக்க நினைத்து பந்தை விளையாட, அது அவரது பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரை நோக்கி சென்றது. அதனை சரியாக கணித்த அலெக்ஸ் டேவிஸும் அபாரமான டைவை அடித்து பந்தை பிடித்து அசத்தினார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதன் காரணமாக இப்போட்டியில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஜோ ரூட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் அபரமான கேட்ச்சை பிடித்து அசத்திய அலெக்ஸ் டேவிஸின் காணொளியானது தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியும் வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now