
Alex Hales Record: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஷுப்மன் ரஞ்சனே 70 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 43 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் உன்முக்த் சந்த் 30 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.