
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் ஆன இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பலருக்கும் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்கள் உள்ளன.
அதன்படி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நேற்று நிம்மதியான செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பவுலர் ஆன்ரிக் நோர்ட்ஜே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். எனினும் ஆபத்து இன்னும் குறையவில்லை. ரபாடா எனும் டேஞ்சர் பவுலர் சவாலாக உள்ளார்.
குறிப்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எதிராக ரபாடாவின் புள்ளிவிவரங்கள் அட்டகாசமாக உள்ளன. குறுகிய காலத்திலேயே விராட் கோலியை இதுவரை 7 முறை ரபாடா விக்கெட் எடுத்துள்ளார். அதுவும் தென் ஆப்பிரிக்க களம், பேட்டிங்கிற்கு கடினமானது என்பதால் கோலி அதிக சீண்டலுக்கு ஆளாவார் என தெரிகிறது.