
All The IPL Teams Aaron Finch Has Played For (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், அதிரடி ஆட்டகாரருமானவர் ஆரோன் ஃபின்ச். இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்தின் போது எந்த அணியும் ஃபின்ச்சை ஏலம் கேட்கவில்லை.
ஆனால், தொடக்க வீரரான ஆரோன் ஃபின்ச் ஐபிஎல் தொடரில் ஒரு முக்கியமான சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அது யாதெனில், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக அணிகளில் விளையாடிய முதல் வீரர் என்பதுதான்.
கடந்த 2011ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஆரோன் ஃபின்ச், பின்னர் 2012ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தமானார்.