
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 20ஆவது ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து தடுமாறியது.
இக்கட்டான சூழலில் இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்து வந்த பென் ஃபோக்ஸ் ஜோ ரூட்டிற்குன் உறுதுணையாக விளையாட, இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்து இங்கிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.