சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து கசான்ஃபர் விலகல்; ஆஃப்கானுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் அல்லா கசான்ஃபர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![Allah Ghazanfar ruled out of Champions Trophy and might miss IPL too! சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து கசான்ஃபர் விலகல்; ஆஃப்கானுக்கு பின்னடைவு!](https://img.cricketnmore.com/uploads/2025/02/Allah-Ghazanfar-ruled-out-of-Champions-Trophy-and-might-miss-IPL-too!-mdl.jpg)
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை இறுதிசெய்ய இன்றே கடைசி தினம் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு அணியும் செய்துள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்து வருகின்றனர்.
Trending
அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தங்களது இறுதி செய்யப்பட்ட அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி முன்பு அறிவித்த அணியில் இடம்பிடித்திருந்த இளம் சுறழ்பந்துவீச்சாளர் அல்லா கசான்ஃபர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரின் போது கசான்ஃபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேற்கொண்டு அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 மாத காலம் ஆகும் என்பதால் அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்ககிறது. அதேசமயம் மற்றொரு நட்சத்திர வீரர் முஜீபுர் ரஹ்மானும் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் இத்தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக நங்யால் கரோட்டிக்கு ஆஃப்கானிஸ்தான் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீத் ஸத்ரான், ஃபரித் அஹ்மத் மாலிக்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் போட்டி அட்டவணை
- பிப்ரவரி 21 - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, கராச்சி
- பிப்ரவரி 26 - ஆஃப்கானிஸ்தான் vs இங்கிலாந்து, லாகூர்
- பிப்ரவரி 28 - ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா, லாகூர்
Win Big, Make Your Cricket Tales Now