
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ள சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. அதன்படி வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியின் போது கள நடுவர்களிடம் அல்ஸாரி ஜோசப் அநாகரிமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலுல் அவர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.