சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. சென்னை அணியின் இந்த மிகச் சிறப்பான வெற்றிக்கு தோனியின் அற்புதமான கேப்டன்சியே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும் வேளையில் 42 வயதான தோனி ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனாலும் அடுத்த சீசனே நிச்சயம் அவருக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் குறித்தும், தோனி குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Trending
இது குறித்து பேசிய அவர், “என்னை பொறுத்தவரை நிச்சயம் தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாகவே விளையாடுவார். அவர் அணியில் இருக்கும் வரை நிச்சயம் அவர்தான் தலைமை தாங்குவார். அவருக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிளமிங் மற்றும் தோனி ஆகியோரது தலைமையின் கீழ் ருதுராஜ் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதோடு அவரது குணமும், திறமையும் அணியை வழிநடத்தும் அளவிற்கு உள்ளது. என்னை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்காக 7 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக விளையாட முடியும். எனவே சிஎஸ்கே அணியின் கேப்டனாக அவரே இருப்பார் ருதுராஜ் மீது சிஎஸ்கே நிர்வாகமும் நல்ல நம்பிக்கை வைத்துள்ளது. பழகுவதற்கு மிகவும் எளிமையான அவர் பக்குவத்துடன் அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியவர். ஏற்கனவே அவரை தோனி சரியான முறையில் கையாண்டு வருகிறார் எனவே நிச்சயம் அவரே அடுத்த கேப்டனாக வர அதிகவாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now