
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முத்லில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெர் மற்றும் புரூக் ஹாலிடே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்களும் புரூக் ஹாலிடே 38 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் அதிரடியாக விளையாடி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தா நிலையில், அடுத்து களமிறங்கிய முன்னணி வீராங்கனைகள் அனைவரும் அடுதடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்ட்களை இழந்து பெவிலியானுக்கு நடையைக் கட்டினர். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்ததுடன் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.