ஐபிஎல் 2022: விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய அமித் மிஸ்ரா!
“விராட் கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை சொல்வதென்பது சூரியனுக்கே டார்ச்லைட் ஒளியை காட்டுவது போன்றது" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து களத்தில் ஒரு வீரராக மட்டுமே விளையாடி வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் கோலி. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இப்போதைக்கு நான்காவது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. இருந்தாலும் அந்த அணிக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.
ஒவ்வொரு சீசனிலும் ரன் மெஷினாக ஆட்டோ பைலட் மோடில் ரன் குவிப்பதில் கோலி வல்லவர். ஆனால், இந்த முறை அவர் தடுமாறி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 6,499 ரன்கள் குவித்துள்ளார் கோலி. தனியொரு பேட்ஸ்மேன் குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இது. இந்நிலையில், அவரது ஃபார்ம் குறித்து அமித் மிஸ்ரா ட்வீட் செய்துள்ளார்.
Trending
இதுகுறித்து அமித் மிஸ்ரா தனது ட்வீட்டில், "கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை சொல்வதென்பது சூரியனுக்கே டார்ச்லைட் ஒளியை காட்டுவது போன்றது. இது வெறும் சில போட்டிகளுக்குதான். வழக்கம் போல அவர் கம்பேக் கொடுப்பார். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அப்படி ஒரு கம்பேக் கொடுத்திருந்தார். இப்போதும் அதை செய்வார் என்றே தெரிகிறது" என கோலிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now