அணியை வழிநடத்துவது மிகப்பெரும் கவுரவம் - டாம் லேதம்!
வங்கதேச அணிக்கெதிரான தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
இத்தொடருக்காக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், மார்டின் கப்தில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, டாம் லேதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Trending
இந்நிலையில் வங்கதேச அணிக்கெதிரான தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லேதம், “வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், நீண்ட நாள்களுக்கு பிறகு நான் விளையாடவுள்ளேன். அப்படி இருக்கும் போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு கேப்டன் பதவியை வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் இத்தொடரின் மூலம் நான் உள்பட பலருக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய தொடரின் போது இப்படி நடக்குமா என்பது கேள்விக்குறி தான். அணியின் கேப்டனாக நீங்கள் எப்போதும் வளரவும் மேம்படுத்தவும் பார்க்கிறீர்கள். அதற்கு இந்த டி20 தொடர் மிகப்பெரும் உந்துதலாக இருக்கும் என நம்புகிறேன்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதற்கு முன்னும் நாள் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளது. ஆனால் இது முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணி. அதனால் அவர்களிடம் நான் நிறைய விசயங்களை பகிர முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now