
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். முத்லில் 15.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வந்தது.
பின்னர் நிலைத்து விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா ஜோடி 131 ரன்கள் பார்டன்ர்ஷிப் அமைத்தார்கள். இதில் மேத்யூஸ் 61 ரன்களுக்கும் தனஞ்செய டி சில்வா ஜோடி 122 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 312 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது. ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷஃபிக் 19 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆசாம் 13 ரன்களுக்கும், ஷான் மசூத் 39 ரன்களுக்கும், சர்ஃப்ராஸ் அஹ்மத் 17 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.