
Anderson & Broad Return To English Team For First Test Against New Zealand; See Full Playing XI Here (Image Source: Google)
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தொடர்களில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இந்த ஆட்டத்தில் ஒருசேர விளையாடவுள்ளனர்.
இதுதவிர அறிமுக வேகப்பந்துவீச்சாளராக மேத்யூ பாட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஸாக் கிரௌலி, ஒல்லி போப் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.