Advertisement

பிபிஎல் 2021: தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!

சிட்னி தண்டருக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
Andre Russell hits Stars to victory against Thunder after non-dismissal controversy
Andre Russell hits Stars to victory against Thunder after non-dismissal controversy (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 12, 2021 • 06:28 PM

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 12, 2021 • 06:28 PM

அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், அலெக்ஸ் ரோஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். 

Trending

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ரோஸ் 77 ரன்களைக் குவித்தார் . 

இதையடுத்து இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியிலும் கிளார்க், லார்கின் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் - கேப்டன் மேக்ஸ்வெல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஸ்டோய்னிஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல்லும் 40 ரன்னிற்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 43 ரன்களைச் சேர்த்ததுடன், வெற்றியையும் தேடித்தந்தார். 

இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement