
Australia T20 Squad: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விலகியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அறிமுக வீரர்காள் மிட்செல் ஓவன், மேத்யூ குன்னமேன் உள்ளிட்டோருடன், காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.