
வங்கதேச அணியுடனான போட்டியின் போது இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டார். பேட்டிங் செய்வதற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த ஹெல்மட் பிரச்சனை காரணமாகவே ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தும், நடுவர்கள் மற்றும் வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் ஏற்கவில்லை.
இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் மூலமாக அவுட் செய்யப்பட்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் மேத்யூஸ். அதன்பின் ஆட்டம் முடிவடைந்த பின் இலங்கை அணி வீரர்கள் வங்கதேச வீரர்களுடன் கைகளை குலுக்கி சமாதானமாக செல்லாமல் ஓய்வறைக்கு திரும்பியது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ரைவல்ரி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர் ட்ரிவின் மேத்யூஸ், வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.