
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் நிஷங்கா 77 ரன்களையும், சமரவிக்ரமா 65 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரா 7 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டு கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்து சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.