
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெத் மூனி மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஜார்ஜியா வோல் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் பெத் மூனியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடிய வந்த பெத் மூனி 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களைச் சேர்த்த கைஉஓடு விக்கெட்டை இழந்தார். இறுதியில் எல்லிஸ் பெர்ரி 29 ரன்களையும், அனபெல் சதர்லேண்ட் 23 ரன்களையும் சேர்த்தனர்.