கவுண்டி கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்த புஜாரா!
மிடில்செஸ் அணிக்கெதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர் சேத்தேஸ்வர் புஜாரா 96 டெஸ்ட்களில் 96 டெஸ்ட்களில் 43.82 சராசரியுடன், 18 சதங்கள் உட்பட 6792 ரன்களை குவித்துள்ளார். இவர் இப்படி சிறந்த ரெக்கார்டை வைத்திருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களாகவே பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் 2022ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக, இலங்கைக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
ரஞ்சி டிராபியில் திறமையை நிரூபித்தால் மட்டுமே, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதில் புஜாரா சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து இங்கிலாந்தில் சக்சஸ் கவுண்டி அணிக்காக விளையாடி வந்த புஜாரா, அடுத்தடுத்து சதங்களை விளாசி தான் யார் என்பதை நிரூபித்தார்.
Trending
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில் அதில் சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் கவுண்டி டெஸ்ட் தொடருக்கு திரும்பியுள்ளார். சக்சஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு 46 ரன்களை அடித்தார். இறுதியில் போட்டி டிரா ஆனது.
இதனைத் தொடர்ந்து இன்று சக்சஸ் அணி, மிடில்செஸ் அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது. இந்நிலையில் சக்சஸ் அணிக் கேப்டனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற மிடில்செஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அலெஸ்டர் ஓர் 7 ரன்னிலும், டாம் கிளர்க் 33 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா - டாம் அஸ்லப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்லப் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் சட்டேஷ்வர் புஜாராவும் சதம் விளாசி அசத்தினார்.
Another County Hundred For Cheteshwar Pujara!
— CRICKETNMORE (@cricketnmore) July 19, 2022
Captain Leading From The Front!#CountyCricket #Sussex #India #England #CheteshwarPujarapic.twitter.com/lPuQA0ekFa
இதன்மூலம் இந்த சீசனில் சட்டேஷ்வர் புஜாரா தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 135 ரன்கள் எடுத்திருந்த டாம் அஸ்லப் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சசெக்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களைச் சேர்த்துள்ளது. சசெக்ஸ் அணி தரப்பில் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா 115 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now