
Another COVID case hits Delhi Capitals as Ricky Ponting's family member tests positive; head coach i (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடந்த ஒரு வார காலமாக சிக்கல் மேல் சிக்கல் உருவாகி வருகிறது. அந்த அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா உறுதியான நிலையில், அடுத்தடுத்து 5 பேருக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து ஐபிஎல் ரத்து செய்யப்படுமா என்ற அளவிற்கு சென்று இறுதியில் போட்டி இடங்கள் மட்டும் மாற்றப்பட்டது.
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் டெல்லி அணி சாதித்து தான் வருகிறது. முக்கிய வீரர்கள் இல்லாத போதும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலிலும் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.