
Another easy win for the table-toppers in SA20 against Durban Super Giants! (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பிரிடோரியா கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கைல் மேய்ர்ஸ் பர்னல் பந்துவீச்சில், கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து முல்டர் 5 விக்கெட்டையும் பர்னல் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்து கேப்டன் குயின்டன் டி காக் 13 நோர்ட்ஜே வேகத்தில் போல்ட் ஆனதைத் தொடர்ந்து, ஹென்ரிச் கிளாசென் 31 ரன்களைச் சேர்த்து ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி ஆதில் ரஷித் பந்துவீச்சில் போல்ட்டாகி நடையைக் கட்டினார். இதனால், டர்பன் அணி 20/3 என படுமோசமாக திணறியது.