இணையத்தை கலக்கும் விருஷ்காவின் வாமிகா!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது மகள் வாமிகாவின் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் நீண்ட காலம் காதலித்து பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர். அதன்பின்னர் காதல் பறவைகளாக உலகெங்கும் பறந்த இவர்கள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெற்றோர்களாக மாறினார்கள். பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் வமிகா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது.
கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளதால் தங்களது மகளுடன் வீட்டில் நேரத்தைக் கழித்த கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் ரசிகர்கள் பலமுறை கேட்டும் தங்களது மகளின் புகைப்படத்தை வெளியிட விரும்பவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி தற்போது தங்கள் மகளின் புகைப்படத்தை தாங்கள் வெளியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
Trending
மேலும் அவராக வளர்ந்து சமூக வலைத்தள பக்கத்தை கையாளும் தன்மை எப்போது வருகிறதோ அப்போது தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி தனது மகளின் புகைப்படத்தை கேட்ட ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் கோலி - அனுஷ்கா ஆகியோர் தங்கள் மகள் பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில் சிறிய கொண்டாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். அதில் தங்களது மகளுடன் எடுத்த சில புகைப்படத்தை இருவரும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதன்படி தனது மகளை அணைத்த படி அனுஷ்கா சர்மா ஒரு படத்தையும், கையில் பிடித்தபடி கோலி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now