கரோனா நிதியுதவி: கேப்டன் கோலி & அனுஷ்கா ஷர்மா 2 கோடி நிதியுதவி!
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 7 கோடி அளவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இறங்கியுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,980 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
கரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்ட உள்ளார்.
இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்கள். மேலும் இருவரும் இணைந்து கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now