
நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என தொடர்ந்து தொடர்களை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. மேலும் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 7 தொடர்களையும், தொடர்ந்து 7 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது.
சர்வதேச அளவில் டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 16 போட்டியிலும், இங்கிலாந்து கேப்டன் மார்கன் 15 போட்டியிலும், வில்லியம்சன் 15 போட்டியிலும் வென்றுள்ளனர். இதே போன்று சொந்த மண்ணில் அதிக டி20 போட்டியில் வென்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார்.
இந்த நிலையில் தான் ரோஹித் சர்மாவை பாராட்டி கிண்டலடித்து முகமது கைஃப் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் ரோஹித் சர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவருடன் கை குலுக்கும் போது கூட கவனமாக இருங்கள். ஏனென்றால் ரோஹித் சர்மா இப்போது தொடுவது எல்லாம் தங்கமாகி விடுகிறது என்று முகமது கைஃப் கூறியுள்ளார்.