Advertisement

பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்!

ஒரு பந்துவீச்சு எதிரணி பாகிஸ்தான் குறித்து யோசிக்கும் பொழுது பாபர் அசாம் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என்று பாதி நேரம் யோசிக்கும். ஆனால் மீதி பாதி நேரத்தை யார் குறித்தும் யோசிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு இருக்காது என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2023 • 22:21 PM
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்!
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
Advertisement

நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டி தொடர்ங்குவதற்கு முன்பாக பெரும்பாலானவர்களின் கருத்துக்கணிப்பில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என்று இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள்? யாருக்கு எந்த இடம்? என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்திய அணி செட்டில் செய்யப்படாத ஒரு அணியாக இருந்தது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் மிகவும் அணி அமைப்பில் தெளிவாக இருந்தார்கள். அவர்களுக்கு தங்களுடைய 11 வீரர்கள் யார் என்று தெரியும். மேலும் மிகக் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு படை அசாதாரண வலிமையோடு இருந்தது. முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வேதப்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை இழந்திருந்தார்கள்.

Trending


இப்படியான சூழ்நிலையில்தான் இந்திய அணி பாகிஸ்தான அணியை வென்றதோடு, மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றது பெரிய ஆச்சரியத்தையும் அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியை நோக்கி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டில் ‘இருந்திருந்தால்’ மட்டும் ‘ஆனால்’ என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஆனால் இன்று பாகிஸ்தான் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும் பொழுது, இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 266 ரன்கள் வைத்து வென்று இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்திய தரப்பில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்? என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பாகிஸ்தான் தரப்பில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்? குறிப்பாக பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

ஒரு பந்துவீச்சு எதிரணி பாகிஸ்தான் குறித்து யோசிக்கும் பொழுது பாபர் அசாம் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என்று பாதி நேரம் யோசிக்கும். ஆனால் மீதி பாதி நேரத்தை பாகிஸ்தான் அணியில் யார் குறித்தும் யோசிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு இருக்காது. அப்படி யோசிக்கும் வகையில் பாகிஸ்தான அணியில் வேறு யாருமே கிடையாது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement